உத்தரபிரதேசத்தில் கனமழை; 14 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலத்தில் சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது.;

Update:2025-07-14 02:56 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் ஜன்பூர், ரேபரெலி, சந்துலி, குஷிநகர், கான்பூர், சித்ரகொட், பண்டா, பிரதாப்கர் உள்பட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கனமழை பெய்தது.

கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், மின்னல், பாம்புகடி உள்ளிட்ட சம்பவங்களால் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, கனமழையால் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்