கேதர்நாத் கோவிலில் இதுவரை 16.52 லட்சம் பக்தர்கள் தரிசனம்

இமயமலைத் தொடரில் மந்தாகினி ஆற்றங்கரையில் கேதார்நாத் கோவில் அமைந்துள்ளது.;

Update:2025-10-09 01:11 IST

டேராடூன்,

இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது 'சார் தாம்' யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. குளிர்காலங்களில் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும். ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும்.

இதில் சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேதார்நாத் கோவில், இமயமலைத் தொடரில் மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. கடந்த மே மாதம் 2-ம் தேதி கேதர்நாத் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து ஈசனை தரிசித்துச் செல்கின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு கேதர்நாத் கோவில் நடை திறக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை கோவிலுக்கு வருகை தந்துள்ள பக்தர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 52 ஆயிரத்தைத் தாண்டி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில் நடை வரும் அக்டோபர் 23-ந்தேதி அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேதர்நாத் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்