நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி

நாடாளுமன்ற தாக்குதலில் போலீசார், பாதுகாப்புப்படையினர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.;

Update:2025-12-13 12:27 IST

டெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தின் மீது 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் 5 பேர் நடத்திய இந்த தாக்குதலில் போலீசார், பாதுகாப்புப்படையினர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 5 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, தாக்குதலில் வீர மரணடைந்தவர்களுக்கு துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்பட மூத்த தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

நாடாளுமன்ற தாக்குதல் நினைவாக நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி உள்பட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்