ஐதராபாத்தில் 213 பாகிஸ்தானியர்கள்: உடனடியாக வெளியேற டிஜிபி உத்தரவு
இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தான் நாட்டவர்கள் வெளியேற உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.;
ஐதரபாத்,
தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள 213 பாகிஸ்தானியர்களும் இன்று 27-ம் தேதி இரவுக்குள் பாகிஸ்தான் திரும்ப வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் இன்றைக்குள் வெளியேற வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், உள்துறை அமைச்சகம் உத்தரவின் படி, ஐதராபாத்தில் உள்ள 213 பாகிஸ்தானியர்களையும் வெளியேற தெலுங்கானா டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.ஐதராபாத் நகரில் 213 பாகிஸ்தானியர்கள் உள்ளனர். இவர்களில் சிலர் சுற்றுலா விசா, சிலர் மருத்துவ விசாக்களிலும் வந்து தங்கி உள்ளனர். இவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டு விட்டதால், இன்று 27-ம் தேதி இரவுக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் இருந்து அந்த 213 பேருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.