வங்காள விரிகுடாவில் 4.2 ரிக்டரில் நிலநடுக்கம்

4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது;

Update:2025-12-02 09:31 IST

புதுடெல்லி,

வங்காள விரிகுடாவில் இன்று காலை 7.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 4.2 ரிக்டர் அளவிலான ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி போன்ற நிகழ்வு ஏதும் ஏற்படுமோ என்கிற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. தேசிய நில அதிர்வு மையம் அப்பகுதியில் நில அதிர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்