டெல்லியில் மோசமடையும் காற்று மாசுபாடு

டெல்லியின் பல இடங்கள் காற்றுத்தர அளவுக் குறியீடு மோசமான நிலையை எட்டின.;

Update:2025-11-01 21:41 IST

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டும் காற்று மாசு தீபாவளிக்கு பிறகு மிக அதிகமாகவே இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த செயற்கை மழையை வர வைக்கலாம் என்ற யோசனையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் தோல்வியில் முடிந்தது. அது பற்றிய மறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் டெல்லியின் பல இடங்கள் காற்றுத்தர அளவுக் குறியீடு மோசமான நிலையை எட்டின. பொதுவாக 100-க்கு மேல் சென்றாலே அது மிதமான நிலையை தாண்டி மோசமான நிலைக்கு கொண்டு செல்கிறது என்று அர்த்தம். ஆனால் இன்று டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 295 ஆக பதிவாகியுள்ளது.

இந்த அதிக அளவிலான காற்று மாசுபாட்டால் சுவாச பிரச்சினைகள் உள்ளவர்களும், நீரிழிவு மற்றும் இருதய பிரச்சினை உள்ளவர்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு காற்று மாசு அதிகமானால் பக்கவாத பாதிப்புகள் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்