குஜராத் சோமநாதர் ஆலயத்தில் அம்பானி குடும்பத்தினர் சாமி தரிசனம்

முகேஷ் அம்பானியின் குடும்பத்தினருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.;

Update:2026-01-02 20:34 IST

காந்திநகர்,

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி இன்று தனது மனைவி நீட்டா அம்பானி மற்றும் மகள் அனந்த் அம்பானி ஆகியோருடன் குஜராத்தில் உள்ள சோமநாதர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார்.

அம்பானி குடும்பத்தினர் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தையொட்டி சோமநாதர் ஆலயத்தில் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் இன்று கோவிலுக்கு வருகை தந்த முகேஷ் அம்பானியின் குடும்பத்தினருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாதுகாவலர்கள் அவர்களை கோவில் வளாகத்திற்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் மூவரும் சோமநாதரை தரிசனம் செய்து வழிபட்டனர். தரிசனத்திற்கு பிறகு வெளியே வந்த முகேஷ் அம்பானி, அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். பின்னர் தனது குடும்பத்தினருடன் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். 

Tags:    

மேலும் செய்திகள்