ஆந்திர பிரதேசம்: பொருட்காட்சியில் தீ விபத்து - சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு

விஜயவாடாவில் நடைபெற்று வரும் பொருட்காட்சியில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.;

Update:2025-02-12 17:45 IST

லக்னோ,

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சித்தாரா பொருட்காட்சி மைதானத்தில் கடந்த சில நாட்களாக பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பல்வேறு கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இன்று மதியம் எதிர்பாராத விதமாக பொருட்காட்சியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது மளமளவென பரவ தொடங்கியது. இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். இதனிடையே பொருட்காட்சி வளாகத்தில் உள்ள உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் திடீரென வெடித்து சிதறியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் தீயை அணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. மேலும் தீ விபத்து காரணமாக சித்தாரா பொருட்காட்சி மைதான பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்கள் வேறு பாதைக்கு மாற்றி விடப்பட்டுள்ளன. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்