கடலில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-11-02 20:59 IST

ஐதராபாத்,

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணபட்டினம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் இன்று மதியம் வங்கக்கடலில் குளிக்க சென்றுள்ளனர். மாணவர்கள் 3 பேரும் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது அலையில் சிக்கியுள்ளனர்.

இதையடுத்து, 3 பேரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், கடலோர காவல் படையினர் கடல் அலையில் சிக்கிய 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால், கடலில் மூழ்கிய 3 மாணவர்களும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர். இதையடுத்து, 3 பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்