ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள கிளியை காப்பாற்ற முயன்ற தொழிலதிபருக்கு நேர்ந்த சோகம்

தொழிலதிபர் வளர்த்து வந்த கிளி, வீட்டிலிருந்து பறந்து அருகிலுள்ள மின் கம்பத்தில் விழுந்தது;

Update:2025-12-13 17:29 IST

பெங்களூர்,

பெங்களூருவின் கிரிநகர் பகுதியைச் சேர்ந்தவர் அருண் குமார்( வயது 32).  தொழிலதிபரான இவர் தனது வீட்டில்,   மக்கா வகை கிளி ஒன்றை வளர்த்து வந்தார். இதன் விலை ரூ.2.5 லட்சம் என சொல்லப்படுகிறது. நேற்று காலையில் அந்த கிளி, வீட்டிலிருந்து பறந்து அருகிலுள்ள மின் கம்பத்தில் விழுந்தது இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருண்குமார், இரும்பு பைப் குழையை எடுத்து கிளியை மீட்கலாம் என திட்டமிட்டுள்ளார்.  கிளி இருந்த இடத்தின் அருகிலிருந்த காம்பவுண்ட் சுவர் மீது ஏறி மீட்பு பணியில் ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு பைப் மேலே சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் பட்டதால் அருண்குமார் மீது கடும் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அருண்குமார் வாகன எண் தகடு தயாரிக்கும் தொழிலை மேற்கொண்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்