மத்திய தகவல் ஆணையராக முன்னாள் சட்டத்துறை செயலர் ராஜ்குமார் கோயல் நியமனம்
முன்னாள் சட்டத்துறை செயலரான ராஜ்குமார் கோயல், 1990 ஆம் ஆண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் பேட்ச் அதிகாரி ஆவார்.;
புதுடெல்லி,
நாட்டில் தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், மூத்த அமைச்சர் ஒருவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதன்படி பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தி ஆகியோர் இக்குழுவில் உள்ளனர். மத்திய அரசின் புதிய தலைமைத் தகவல் ஆணையர் பதவி காலியாக இருந்தது. எனவே புதிய தகவல் ஆணையரை நியமிப்பது தொடர்பாக நேற்று முன் தினம் ஆலோசனை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஆலோசனைக்கு பிறகு ராஜ் குமார் கோயல் புதிய தகவல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் சட்டத்துறை செயலரான ராஜ்குமார் கோயல், 1990 ஆம் ஆண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் பேட்ச் அதிகாரி ஆவார். உள்துறை அமைச்சகத்தின் எல்லை மேலாண்மைத் துறையின் செயலாளராகவும் இவர் பதவி வகித்துள்ளார் . ஜனாதிபதி திரவுபதி முர்மு முன்னிலையில் ராஜ் குமார் கோயல் பதவியேற்க உள்ளார். இவருடன், மேலும் 8 தகவல் கமிஷனர்கள் நியமிக்கப்பட உள்ளனர்,