கொலை வழக்கில் கைது: சிறையில் இருந்தபடி தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன் தினம் எண்ணப்பட்டன.;

Update:2025-11-16 01:51 IST

பாட்னா,

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன் தினம் எண்ணப்பட்டன. இதில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி அபார வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆளும் ஐக்கிய தளம் கட்சியை சேர்ந்த அனந்த் சிங் போட்டியிட்டார். மொகாமா தொகுதியில் போட்டியிட்ட அனந்த் சிங் அபார வெற்றிபெற்றார். அனந்த் சிங் 91 ஆயிரத்து 416 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் வீணா தேவியை 28 ஆயிரத்து 26 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

ஜன்சுராஜ் கட்சியின் ஆதரவாளர் கொலை வழக்கில் கடந்த சில நாட்களுக்குமுன் அனந்த் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது சிறையில் இருந்தபடியே அனந்த் சிங் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். இவர் இதற்கு முன்பும் 7 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்