பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தோனேசியா விருப்பம்;

இந்தியாவின் மதிப்பை உலக நாடுகள் மத்தியில் பிரதமர் மோடி உயர்த்துள்ளார் என்று ராஜ்நாத் சிங் கூறினார்;

Update:2025-11-16 00:15 IST

லக்னோ,

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் உத்தரபிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ளார். அவர் லக்னோவில் பாஜக நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன்பின் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது, நமது தலைமை, நமது தொண்டர்களின் உழைப்பால் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. லக்னோவில் பிரமோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலை அமைந்துள்ளது.

பாஜகவில் நான் மாவட்ட இளைஞரணி தலைவராகவும், தேசிய இளைஞரணி தலைவராகவும், கட்சியின் தேசிய பொதுச்செயலாளராகவும் பணியாற்றியுள்ளேன். கட்சியில் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.

இந்தியாவின் மதிப்பை உலக நாடுகள் மத்தியில் பிரதமர் மோடி உயர்த்துள்ளார். தற்போது இந்தியா பேசும்போது உலகம் கேட்கிறது’ என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்