பள்ளத்தாக்கில் கார் பாய்ந்து விபத்து : 8 பேர் உயிரிழப்பு

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறாா்கள்.;

Update:2025-04-23 03:09 IST

போபால்,

மத்திய பிரசேதம் மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த நண்பர்கள் சிலர் தங்களுடைய குடும்பத்துடன் கூட்டாக சேர்ந்து தாமோவில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான ஜோகஸ்வர் நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். இதனை தொடர்ந்து சுற்றுலா முடிந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் போது மலைப்பகுதியில் அவர்களுடைய சொகுசு கார் ஒன்றின் 'பிரேக்' திடீரென செயலிழந்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை கார் இழந்து பள்ளத்தாக்கில் வேகத்தில் பாய்ந்தது.

பாய்ந்த வேகத்தில் கார் ஆற்றில் விழுந்தது. இதில் காரில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறாா்கள்.

Tags:    

மேலும் செய்திகள்