டெல்லி; காற்று மாசுபாட்டால் அதிகரித்து வரும் நெஞ்சு பாதிப்புகள்: டாக்டர் எச்சரிக்கை

டெல்லியின் ஆனந்த்பூர், அலிப்பூர் மற்றும் பாவனா நகரங்களில் நேற்று காற்று தர குறியீடு 400-க்கும் மேல் பதிவாகி இருந்தது.;

Update:2025-11-10 17:01 IST

குருகிராம்,

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் டெல்லி-என்.சி.ஆர். பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கு கடுமையான சுகாதார பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி மேதாந்தா மருத்துவமனையின் நுரையீரல் நிபுணரான டாக்டர் அரவிந்த் எச்சரிக்கை செய்துள்ளார்.

இன்று காலை 8 மணியளவில் என்.சி.ஆர். பகுதியில் காற்று தர குறியீடு 345 ஆக இருந்தது. இது மிக மோசம் என்ற அளவில் உள்ளது. இதுபற்றி அவர் கூறும்போது, சுவாச பாதிப்புகளால் மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் அதிகளவில் வருகின்றனர். அவர்களில், குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களுக்கு இருமல், காய்ச்சல், ஜுரம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகிய அறிகுறிகள் உள்ளன. மூக்கொழுகுதல், விரைவாக சுவாசித்தல் உள்ளிட்ட பாதிப்புகளும் காணப்படுகின்றன.

Advertising
Advertising

சிலருக்கு இருமல் அல்லது நிம்மோனியா பாதிப்புடன் மீண்டும் வருகிறார்கள். நெஞ்சு பாதிப்புகள் தொடர்பாக நிறைய பேர் வருகிறார்கள் என்று கூறியுள்ளார். என்னுடைய நண்பர்கள் பலர் நெபுலைசர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். இது உண்மையில் தவறானது என அவர் எச்சரிக்கிறார்.

அதிக காற்று மாசுபாடு உள்ள பகுதிகளுக்கு செல்லாமல், கூட்ட நெரிசலான பகுதிகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். மருந்துகளை சீராக எடுத்து கொள்ளுங்கள். நீரேற்றத்துடன் உடலை வைத்து கொள்ளுங்கள். கொழுப்புள்ள உணவை தவிருங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

டெல்லியின் ஆனந்த்பூர், அலிப்பூர் மற்றும் பாவனா நகரங்களில் நேற்று காற்று தர குறியீடு 400-க்கும் மேல் பதிவாகி இருந்தது. சாந்தினி சவுக், ஆர்.கே. புரம் மற்றும் பாத்பர்கஞ்ச், சோனியா விஹார் நகரங்களிலும் காற்று மாசு மோசமடைந்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்