மருந்து பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் வாயு கசிவு - அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-08-13 20:20 IST

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உள்ள தொழிற்பேட்டை பகுதியில் மருந்து பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று தொழிலாளர்கள் பலர் வேலை செய்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் இன்று வாயு கசிவு ஏற்பட்டது. மருத்து பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் குளோரின் வாயு கசிந்துள்ளது. இந்த வாயு கசிவால் தொழிலாளர்கள் பலருக்கும் மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்