டெல்லியில் இன்று காமன்வெல்த் சபாநாயகர் மாநாடு: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

மாநாட்டுக்கு நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா தலைமை தாங்குகிறார்.;

Update:2026-01-15 06:45 IST

புதுடெல்லி,

28-வது காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு டெல்லி நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா தலைமை தாங்குகிறார். பிரதமர் மோடி, மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார்.

இந்த மாநாட்டில் 42 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகள் பங்கேற்கிறார்கள் என ஓம்பிர்லா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நிலவும் சமகால பிரச்சினைகள், நாடாளுமன்ற செயல்பாட்டில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சமூக ஊடகங்களின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற அதிகாரி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்