காரில் நாயுடன் வந்த காங்கிரஸ் பெண் எம்.பி.; நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு

நாங்கள் ஒரு விலங்கை பாதுகாக்கிறோம். ஆனால் இது பெரிய பிரச்சினையாகவும், விவாத பொருளாகவும் மாறிவிட்டது என்று எம்பி கூறினார்.;

Update:2025-12-01 21:07 IST

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடரில் கலந்து கொள்ள காங்கிரஸ் பெண் எம்.பி. ரேணுகா சவுத்ரி தனது காரில் வந்தார். அவர் காரில் நாய் ஒன்றையும் அழைத்து கொண்டு வந்திருந்தார். கடுமையான பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்பட்டு வரும் நாடாளுமன்றத்தில் எம்.பி. ஒருவர் நாயுடன் வந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பாதுகாப்பு குறித்த பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.இதுகுறித்து ரேணுகா சவுத்ரி கூறியதாவது:-

நான் சாலையில் சென்றபோது இந்த நாய்க்குட்டி அலைந்து கொண்டே இருந்தது. விபத்தில் சிக்கி கொண்டு விடுமோ என்று நினைத்து அதை காரில் எடுத்து போட்டு கொண்டு நாடாளுமன்றத்துக்கு வந்து விட்டேன். இப்போது கார் வாகன நிறுத்துமிடத்துக்கு சென்று விட்டது. காருடன் அந்த நாயும் போய்விட்டது.இப்போது இதை பற்றி விவாதிப்பதில் என்ன பயன்? கடிப்பவர்கள் உண்மையில் நாடாளுமன்றத்துக்கு உள்ளே உட்கார்ந்து இருக்கின்றனர். நாங்கள் ஒரு விலங்கை பாதுகாக்கிறோம். ஆனால் இது பெரிய பிரச்சினையாகவும், விவாத பொருளாகவும் மாறிவிட்டது. அரசுக்கு வேற வேலை எதுவுமே இல்லையா? நாயை வீட்டுக்கு அனுப்பி, அதை வீட்டிலேயே வைத்திருக்க சொல்லி இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்