ஒடிசா: பல்கலைக்கழக விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை
மாணவன் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் மாவட்டத்தில் கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி என்ற தனியார் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி சத்தீஷ்காரை சேர்ந்த ராகுல் என்ற இளைஞர் பிடெக் முதலாம் ஆண்டு கல்வி பயின்று வந்தார்.
இந்நிலையில், மாணவன் ராகுல் இன்று விடுதியில் உள்ள தனது அறையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், கல்லூரி மாணவன் ராகுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவன் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பல்கலைக்கழகத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 3 மாணவ, மாணவியர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்-மந்திரிக்கு அந்த பகுதி எம்.எல்.ஏ. சரோஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.