நடுவானில் பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்

இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.;

Update:2025-06-20 14:11 IST

மும்பை,

தலைநகர் டெல்லியில் இருந்து இன்று மராட்டியத்தின் புனேவுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் 150க்கும் மேற்பட்ட பயணிகள், விமான பணியாளர்கள் பயணித்தனர்.

விமானம் மராட்டிய வான்பரப்பில் நுழைந்தது. நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் மீது பறவை மோதியது. இதனால், துரிதமாக செயல்பட்ட விமானி விமானத்தை அவசரமாக புனே விமான நிலையத்தில் தரையிறக்கினார்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதேவேளை, புனேவில் இருந்து ஏர் இந்தியா விமானம் மீண்டும் டெல்லிக்கு செல்லவில்லை. இதையடுத்து, டெல்லிக்கு டிக்கெட் பதிவு செய்திருந்த பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அந்த பயணிகளின் டிக்கெட் தொகை திருப்பி ஒப்படைக்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்