டெல்லி: 6 தங்க கட்டிகளை உள்ளாடையில் மறைத்து விமானத்தில் கடத்தி வந்த பெண் கைது

சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்த தங்க கட்டிகளின் எடை 997.5 கிராம் ஆகும்.;

Update:2025-10-25 11:25 IST

புதுடெல்லி,

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மியான்மர் நாட்டின் யாங்கூன் நகரில் இருந்து 8எம் 620 என்ற எண் கொண்ட விமானம் ஒன்று வந்தது.

அதில் வந்திறங்கிய பெண் பயணி ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து சென்றார். வரி செலுத்த அவசியமில்லாத பசுமை வழியில் அவர் சென்றார்.

இதனால், அவரை மறித்த சுங்க அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், அவர் உள்ளாடையின் உள்ளே 6 தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

அவற்றின் எடை 997.5 கிராம் ஆகும். இதனை தொடர்ந்து, சுங்க இலாகாவின் சட்டம் 1962-ன் கீழ் அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி கொண்டு சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் யாரேனும் கூறி இதனை கடத்தி சென்றாரா? வேறு யாருக்கு எல்லாம் இதனுடன் தொடர்பு உள்ளது என்பது பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்