டெல்லி: அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் புல்டோசர் கொண்டு இடிப்பு

அரசு நிலத்தில் குடியேறியவர்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேறுமாறு டெல்லி அரசு நோட்டீஸ் அனுப்பியது.;

Update:2025-06-11 12:39 IST

டெல்லி, 

தலைநகர் டெல்லியில் கோவிந்த்பூர் பகுதியில் பூமைதின் என்ற இடம் உள்ளது. இங்கு அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால், அரசு நிலத்தில் குடியேறியவர்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேறுமாறு டெல்லி அரசு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருப்பது சட்டவிரோதம் என்றும் டெல்லி அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து, பூமைதின் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடியேறியவர்கள் 3 நாட்களில் வெளியேறுமாறு டெல்லி வளர்ச்சி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இன்று புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டுள்ளன. பூமைதின் பகுதியில் குஹி-ஹொப்ரி என்ற பகுதியில் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுமார் 300 வீடுகளை அதிகாரிகள் இடித்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்