துணை முதல் மந்திரி பதவியே போதும்; டிகே சிவக்குமார் பேட்டி

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சித்தராமையா முதல்-மந்திரியாகவும், டி.கே. சிவக்குமார் துணை முதல்-மந்திரியாகவும் பணியாற்றி வருகின்றனர்.;

Update:2025-12-26 03:37 IST

பெங்களூரு,

2½ ஆண்டுகள் முடிந்த பிறகும் சித்தராமையா முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக மறுத்து வருகிறார். இதனால் சிவக்குமார் ஆதரவாளர்கள் அவரை முதல்-மந்திரியாக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் அங்கு அதிகார மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் 2 முறை சந்தித்து பேசினர். அப்போது தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று தெரிவித்தனர். இந்த நிலையில் தான் கட்சிக்கு விசுவாசமான தொண்டன் என்றும், துணை முதல்-மந்திரியாக நீடிப்பேன் என்றும் டி.கே. சிவக்குமார் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக டெல்லியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

“எந்த பதவியை வகிப்பதை விட, கட்சியின் விசுவாசமான தொண்டனாக இருப்பதே நான் விரும்புகிறேன். அதுதான் எனக்கு நிரந்தர பதவி. 1980 முதல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறேன். அந்தப் பொறுப்பில் தொடர்வேன். நான் காங்கிரஸ் மேலிடத்தில் யாரையும் சந்திக்கவில்லை. துணை முதல்-மந்திரியாக நீடிப்பேன். அந்த பதவியை தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பதவி ஒரு பொருட்டல்ல. கட்சியில் சிவக்குமார் மட்டும் அல்ல, சித்தராமையா மட்டுமல்ல. எங்களை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு உழைத்த முழு அணியும் தான் காரணம். தலைமைத்துவத்தை தொடர் பான எந்த ஒரு முடிவும் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தில் தான் இருக்கிறது. எந்த நாளிலும் கட்சி ஒரு முடிவை எடுக்கலாம். மேலிடம் எந்தவொரு முடிவு எடுத்தலாலும் அது ஏற்றுக்கொள்ளப்படும்.” என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்