என்னோட இரண்டு பற்களை பிடுங்கிட்டாங்க.. ஏன் தெரியுமா? சுபான்ஷு சுக்லா கலகல பேச்சு

அமெரிக்காவின் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுபான்ஷு சுக்லா சென்று வந்தார்.;

Update:2025-12-26 03:49 IST

மும்பை,

மும்பை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

விண்வெளி வீரராக விரும்பினால், உங்கள் ஞானப்பற்களை இழக்க தயாராக இருக்க வேண்டும். விண்வெளி பயண தேர்வின்போதே பலரது பற்கள் பிடுங்கப்படுகின்றன. விண்வெளியில் எந்த ஒரு மருத்துவ அவசரநிலையையும் கையாள விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆனால், அங்கே செய்ய முடியாத ஒரே விஷயம் பல் அறுவை சிகிச்சை ஆகும். எனவே விண்கலம் ஏவப்படுவதற்கு முன்பே வீரர்களுக்கு பற்களில் எந்த பிரச்சினையும் ஏற்படாததை உறுதிப்படுத்தி கொள்கிறார்கள். இதற்காகவே எனது 2 ஞானப்பற்கள் அகற்றப்பட்டன. என்னுடன் பயிற்சி பெற்ற பிரசாந்த் நாயர் 3 பற்களையும், அங்கத் பிரதாப் 4 பற்களையும் அகற்றியுள்ளனர்.

விண்வெளி வீரராக வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் ‘‘ஞானத்தை’’ (ஞானப்பல்) விட்டு கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் வேடிக்கையாக கூறினார்.17 முதல் 25 வயதுக்கு இடைப்பட்ட வயதில் கடைவாய் பகுதியில் கடைசியாக முளைக்கும் பல்லை “ஞானப்பல்” அல்லது “அறிவுபல்” என்று அழைக்கின்றனர். ஒரு மனிதன் மனரீதியாக, அறிவுரீதியாக முதிர்ச்சி அடையும் பருவத்தில் முளைப்பதால் இதற்கு இந்த பெயர் கூறப்படுகிறது. ஆங்கிலத்தில் இது “விஸ்டம் டீத்” என்று அழைக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்