படகு சவாரியின்போது விபத்து; கங்குலியின் அண்ணன்-அண்ணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான நிலையில், அதில் இருந்த அனைத்து பயணிகளும் கடலில் விழுந்தனர்.;
புரி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. இவரது அண்ணன் சினேகாசிஷ் கங்குலி. அவர் தனது மனைவி அர்பிதாவுடன், ஒடிசா மநிலம் புரி கடற்கரை ஒட்டிய பகுதியில் உல்லாச படகு சவாரி சென்றிருந்தார்.
வேகமாக சென்ற படகு, ராட்சத அலைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திடீரென கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் படகில் இருந்த அனைத்து பயணிகளும் கடலில் விழுந்தனர். துரிதமாக செயல்பட்ட பாதுகாவலர்கள், கங்குலியின் சகோதரர் மற்றும் அண்ணி உள்ளிட்டோரை காப்பாற்றினர்.
இதுகுறித்து கங்குலியின் அண்ணி, சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். "நாங்கள் கடவுளின் அருளால் காப்பாற்றப்பட்டோம். நான் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இதுபோன்ற விபத்து நடக்காமல் இருக்க நான் ஒடிசா முதல் மந்திரிக்கு கடிதம் எழுத உள்ளேன்" என்று கூறி உள்ளார்.