நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது கொடுங்கள்; பிரதமருக்கு ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்

சமூக நீதி, நல்ல நிர்வாகம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்காக பாடுபடுபவர் நிதிஷ் குமார் என கே.சி. தியாகி கூறியுள்ளார்.;

Update:2026-01-10 12:52 IST

பாட்னா,

பீகாரில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கொண்டது. நிதிஷ் குமார் மீண்டும் முதல்-மந்திரியானார். இந்நிலையில், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரி, அக்கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் ராஜ்யசபை உறுப்பினரான கே.சி. தியாகி, பிரதமர் மோடியை வலியுறுத்தி உள்ளார்.

நீண்டகாலம் முதல்-மந்திரியாக சேவையாற்றி வரும் அவர், பீகார் அரசியல் மட்டுமின்றி தேசிய அளவில் பொது வாழ்வில், அரசாட்சிக்கு புதிய வழிகாட்டலை ஏற்படுத்தி தந்து, சமூகத்தில் சமத்துவம் ஏற்படுத்தியவர் என புகழ்ந்து கூறியுள்ளார்.

சமூக நீதி, நல்ல நிர்வாகம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என தொடர்ச்சியாக உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்ட அவர் தேசிய அங்கீகாரம் பெற தகுதி படைத்தவர்.

பலர் வாழ்நாளிலேயே இந்த கவுரவம் பெற்றுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் சார்பாக, நிதிஷ் குமாருக்கு இந்த கவுரவம் கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம். அதனால், வரலாறு நீண்டகாலம் உங்களை பாராட்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்