அயோத்தி ராமர் கோவிலை சுற்றி 15 கி.மீ.க்கு அசைவ உணவு டெலிவரி செய்ய தடை

தடையை மீறி மது மற்றும் அசைவ உணவு விற்பனை நடந்து வருவதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.;

Update:2026-01-10 23:12 IST

Image Courtesy : PTI

லக்னோ,

முன்னதாக அயோத்தி மற்றும் பைசாபாத்தை இணைக்கும் 14 கி.மீ. ராமர் பாதையில் மது மற்றும் இறைச்சி விற்பனையை தடை செய்ய அயோத்தி நகராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது. இதன்படி அயோத்தியின் ‘பஞ்சகோசி பரிக்ரமா’ எல்லைகளுக்குள் இறைச்சி, மது விற்க தடை உள்ளது.

இருப்பினும் ஒரு சில இடங்களில் தடையை மீறி மது விற்பனை நடந்து வருவதாகவும், சில உணவகங்களில் அசைவ உணவு பரிமாறப்படுவதாகவும் உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவிலை சுற்றி 15 கிலோ மிட்டர் சுற்றளவிற்கு அசைவ உணவு டெலிவரி செய்ய அயோத்தி நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அயோத்தியின் ‘பஞ்சகோசி பரிக்ரமா’ எல்லைகளுக்குள் இறைச்சி விற்பனை நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்