குஜராத்: தொழிற்சாலையில் டேங்கர் லாரி வெடித்து 3 பேர் பலி

தொழிற்சாலையில் டேங்கர் லாரி வெடித்து, 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது.;

Update:2025-07-28 19:24 IST

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் வதோதரா அருகே உள்ள மோஷி கிராமத்தில் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலையில் டேங்கர் லாரியை சூடாக்கி நிலக்கீலை காலி செய்யும் போது காற்றின் அழுத்தம் அதிகமாகி டேங்கர் வெடித்து சிதறியது.

இதில் லாரிக்கு அருகே நின்றிருந்த உத்தர பிரதேச மாநிலம் அசம்கர் பகுதியைச் சேர்ந்த அர்மான் ஜியாவுல்லா (வயது 26), ராஜஸ்தானின் அல்வாரைச் சேர்ந்த அசோக் குர்ஜார் (21) மற்றும் வதோதராவைச் சேர்ந்த ஷாகிப் அக்தர் கான் (33) என 3 பேர் பலியாயினர்.

சம்ப இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிற்சாலையில் டேங்கர் லாரி வெடித்து, 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்