டெல்லியில் 24 -ம் தேதி சபாநாயகர்கள் மாநாடு: அமித்ஷா தொடங்கி வைக்கிறார்
சிறப்பு விருந்தினராக மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா பங்கேற்பதாக டெல்லி சபாநாயகர் விஜேந்தர் குப்தா தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
வருகிற 24 ஆம் தேதி டெல்லி சட்டப்பேரவையில் அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தொடங்கி வைப்பார் என்று டெல்லி சபாநாயகர் விஜேந்தர் குப்தா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
32 சபாநாயகர்கள் மற்றும் துணை சபாநாயகர்கள், மேலவை, கீழவை தலைவர்கள், துணைத்தலைவர்கள் என இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளனர்.இந்தியாவில் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடப்பது இதுவே முதல்முறை. வருகிற 24-ம் தேதி தொடக்க அமர்வு நடைபெறும். இந்த மாநாட்டை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.நிறைவு விழா 25-ம் தேதி நடைபெறும். மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தமாநாட்டில் டெல்லி எம்.பி.க்கள், முதல்-மந்திரி ரேகா குப்தா, கேபினட் மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.