ஐதராபாத்: சர்வதேச பயிர்கள் ஆய்வு மையத்தில் பிடிபட்ட சிறுத்தை

சிறுத்தையை வனத்துறையினர் நேரு உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.;

Update:2025-04-17 22:51 IST

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே புறநகர் பகுதியில் சர்வதேச பயிர்கள் ஆய்வு மையம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக இரண்டு சிறுத்தைகள் சுற்றித் திரிந்தன.

இந்த சிறுத்தைகளை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்திருந்தனர். இந்த நிலையில், வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது. கூண்டில் சிக்கிக்கொண்ட சிறுத்தையை வனத்துறையினர் நேரு உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்