விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் - பிரதமர் மோடி

விவசாயிகளுக்கு அரசு பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்;

Update:2025-06-07 15:48 IST

புதுடெல்லி ,

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

கடின உழைப்பாளிகளான விவசாயிகளுக்கு சேவை செய்வது எங்களுக்குக் கிடைத்த பாக்கியம். கடந்த 11 ஆண்டுகளாக, விவசாயிகளுக்கு அரசு பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளது. செழிப்பை அதிகரித்துள்ளன. மேலும் விவசாயத் துறையின் ஒட்டுமொத்த மாற்றத்தையும் உறுதி செய்துள்ளன. மண் ஆரோக்கியம் மற்றும் நீர்ப்பாசனம் போன்ற விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம், அவை பெரிதும் பயனளித்துள்ளன. விவசாயிகள் நலனுக்கான எங்கள் முயற்சிகள் வரும் காலங்களில் அதிக செயலுடன் தொடரும்.என தெரிவித்துள்ளார் .

Tags:    

மேலும் செய்திகள்