ஜம்மு: சிறந்த மாணவிகளுக்கு மத்திய இணை மந்திரி இலவச லேப்டாப் பரிசு வழங்கி ஊக்குவிப்பு

தீபாவளி பண்டிகையில், சிறந்த முறையில் படிக்க கூடிய மாணவிகளுக்கு இதனை விட சிறந்த பரிசு வேறு என்னவாக இருக்க முடியும் என மத்திய இணை மந்திரி கூறியுள்ளார்.;

Update:2025-10-22 15:13 IST

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு உட்பட்ட உத்தம்பூர் தொகுதியின் எம்.பி.யான பா.ஜ.க.வை சேர்ந்த டாக்டர் ஜிதேந்திரா சிங், மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறைக்கான இணை மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், தன்னுடைய தொகுதியில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவிகளை தேர்ந்தெடுத்து, அவர்கள் நன்றாக படிப்பதற்கு வசதியாக, இலவச லேப்டாப்புகளை வழங்கி அவர்களை ஊக்குவித்து உள்ளார்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை மந்திரி ஜிதேந்திரா சிங், தீபாவளி பண்டிகையில், சிறந்த முறையில் படிக்க கூடிய மாணவிகளுக்கு இதனை விட சிறந்த பரிசு வேறு என்னவாக இருக்க முடியும். நன்றாக படிக்க கூடிய மாணவிகளுக்கு நாங்கள் இந்த பரிசை இன்று வழங்கியிருக்கிறோம் என்றார்.

அவர்கள் வருங்காலத்தில் தங்களுடைய இலக்குகளை அடைந்து சாதனை படைக்கலாம். அதற்கு எங்களால் முடிந்த சிறிய உதவியை நாங்கள் செய்திருக்கிறோம் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்