சுப்ரீம் கோர்ட்டிற்கு 3 நீதிபதிகள் பெயர் பரிந்துரை
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.;
புதுடெல்லி,
சமீபத்தில் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதிகள் அபய், எஸ்.ஓகா மற்றும் திரிவேதி ஆகியோர் ஓய்வு பெற்றனர். இதனால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பதவிக்கு 3 காலியிடங்கள் உருவாகின. தற்போது 31 நீதிபதிகள் கொண்டு சுப்ரீம் கோர்ட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம் ஐகோர்ட்டு நீதிபதிகள் 3 பேரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக பரிந்துரை செய்துள்ளது.
பரிந்துரை செய்யப்பட்ட நீதிபதிகள் விபரம் பின்வருமாறு:
1. கர்நாடகா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அன்ஜாரியா.
2. கவுகாத்தி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பிஸ்னோய்,
3. மும்பை ஐகோர்ட்டு நீதிபதி சந்துர்கர்.
கொலிஜீயத்தின் இந்த பரிந்துரைகள் அங்கீகரிக்கப்பட்டால்,சுப்ரீம் கோர்ட்டு அதன் முழு அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் எண்ணிக்கையுடன் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.