ராஜஸ்தான், மத்தியபிரதேசத்தில் என்.ஐ.ஏ. சோதனை

சோதனையில் டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update:2025-06-14 20:49 IST

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தா மற்றும் மத்தியபிரதேசத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) இன்று அதிரடி சோதனை நடத்தியது. மத்தியபிரதேசத்தின் போபாலில் 3 இடங்கள் , ராஜஸ்தானின் ஜலாவாரில் 2 இடங்கள் என மொத்தம் 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

தடைசெய்யப்பட்ட ஹிப்ஸ் உட் தஹிர் என்ற தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான இடங்கள் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையில் கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்