பெண் விமானியை பலாத்காரம் செய்ய முயற்சி - விமானி மீது வழக்குப்பதிவு

பெண் விமானியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய சீனியர் விமானி முயன்றுள்ளார்.;

Update:2025-11-23 10:42 IST

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை அருகே பேகும்பேட் பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் விமானியாக பணியாற்றி வருகிறார். அதே அலுவலகத்தில் சீனியர் விமானியாக ஒருவரும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பெண் விமானி, தான் வேலை செய்யும் விமான நிறுவனத்தின் அலுவல் தொடர்பாக சீனியர் விமானியுடன் பெங்களூருவில் உள்ள அல்சூர் பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளார்.

பின்னர் அங்குள்ள தங்கும் விடுதியில் 2 பேரும் தங்கியுள்ளனர். அந்த சமயத்தில் சீனியர் விமானி, பெண் விமானியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி அவசரம், அவசரமாக ஐதராபாத்துக்கு சென்றுள்ளார்.

சம்பவம் பற்றி ஐதராபாத்தில் உள்ள காவல் நிலையத்தில் சீனியர் விமானி மீது அவர் பாலியல் பலாத்கார புகார் கூறினார். ஆனால் இந்த வழக்கு அல்சூர் போலீஸ் நிலைய எல்லைக்குள் நடந்ததால், அந்த புகாரை ஐதராபாத் போலீசார், அல்சூர் போலீசாருக்கு அனுப்பினர். அதன் பேரில் அல்சூர் போலீசார் சீனியர் விமானி மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்