மதுவுக்கு அடிமையானதால் விபரீதம்.. நண்பருக்கு, மகளை விருந்தாக்கிய கொடூர தொழிலாளி

நண்பருக்கு மகளை விருந்தாக்கிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update:2025-11-23 10:30 IST

கோப்புப்படம்

கொப்பல்,

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கங்காவதி நகரில் உள்ள காலனியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருபவர் 17 வயது சிறுமி. இவர் ஒரு பி.யூ. கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கூலித் தொழிலாளியான இவரது தந்தைக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சிறுமியின் தாயாரிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று மது போதையில் வீட்டிற்கு வந்த தொழிலாளி, சிறுமியை குண்டம்மா முகாமில் உள்ள அவரது நண்பரின் வீட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றார். பின்னர் சிறுமியை சில நாட்கள் நண்பரின் வீட்டில் தங்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். இதையடுத்து அங்கு தங்கிய சிறுமியை தந்தையின் நண்பர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மறுநாள் காலையில் சிறுமி அவரது தந்தையிடம் கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத தந்தை, என் நண்பருக்கு தான் உன்னை திருமணம் செய்து வைக்க போகிறேன், இதுபற்றி வெளியில் யாரிடமும் சொன்னால் உன் அம்மாவை கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.

இதனால் சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்தார். பின்னர் தந்தையின் நண்பர் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயன்றார். அப்போது சிறுமியை, அவளது தாய் காப்பாற்றினார். பின்னர் சிறுமியிடம் விசாரித்தபோது நடந்த அனைத்தையும் தனது தாயிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து தாயின் உதவியுடன் சிறுமி, இதுகுறித்து கங்காவதி நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சிறுமியின் தந்தை மற்றும் அவரது நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்