விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் தவணைத்தொகை விடுவிப்பு தேதி அறிவிப்பு

பிஎம் கிசான் திட்டத்தின் தவணைத்தொகையை பிரதமர் மோடி விடுவிக்கிறார்.;

Update:2025-07-30 15:04 IST

டெல்லி,

பிஎம் கிசான் நிதி திட்டத்தை மத்திய அரசு 2019ம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டப்படி, சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. 4 மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2000/- வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000/- விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இணைந்த விவசாயிகளுக்கு இதுவரை 19 தவணைகளாக 3.69 லட்சம் கோடி ரூபாய் வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிஎம் கிசான் திட்டத்தின் 20வது தவணைத்தொகை விடுவிப்பு தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு பிஎன் கிசான் திட்டத்தின் 20வது தவணைத்தொகை வரும் 2ம் தேதி விடுவிக்கப்படுகிறது.

2ம் தேதி உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி பிஎம் கிசான் திட்ட பயனாளர்களான 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு 20வது தவணத்தொகையாக 20 ஆயிரத்து 500 கோடி ரூபாயை விடுவிக்கிறார்.  

Tags:    

மேலும் செய்திகள்