பிரதமர் மோடி அடுத்த வாரம் மொரீசியஸ் பயணம்
பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக மொரீசியஸ் நாட்டிற்கு செல்ல உள்ளார்.;
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 11-ந்தேதி மொரீசியஸ் நாட்டிற்கு செல்ல உள்ளார். அங்கு அவர் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது, மொரீசியஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, இந்திய பாதுகாப்புப் படைகளின் ஒரு குழுவும் மொரீசியஸ் தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொரீசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் அழைப்பு விடுத்ததன் பேரில் பிரதமர் மோடி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.