ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை நீர்மூழ்கி கப்பலில் பயணம்

கார்வார் துறைமுகத்தில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடலில் பயணிக்க உள்ளார்.;

Update:2025-12-27 09:05 IST

புதுடெல்லி,

ஜனாதிபதி திரௌபதி முர்மு கோவா, கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன்படி முதற்கட்டமாக இன்று மாலை அவர் கோவா செல்கிறார்.

தொடர்ந்து தனது பயணத்தின் ஒரு பகுதியாக 28-ந்தேதி(நாளை) கர்நாடக மாநிலம் கார்வார் துறைமுகத்தில் இருந்து நீர் மூழ்கிக் கப்பல் மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடலில் பயணிக்க உள்ளார். தொடர்ந்து 29-ந்தேதி ஜாம்ஷெட்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்வி மையத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்