புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: துணை ஜனாதிபதியிடம் முதல்-மந்திரி ரங்கசாமி கோரிக்கை

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது;

Update:2025-06-17 10:12 IST

புதுச்சேரி,

3 நாட்கள் பயணமாக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நேற்று முன் தினம் புதுச்சேரி வந்தார். அவர் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம், ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இந்நிலையில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்-மந்திரி ரங்கசாமி நேரில் சந்தித்தார். அப்போது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க ஆதரவு தரும்படி துணை ஜனாதிபதியிடம் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி கோரிக்கை விடுத்தார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி சட்டசபையில் அனைத்துக்கட்சிகளும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்