ராணுவத்துக்கு எதிராக அவதூறு கருத்து; ராகுல்காந்திக்கு ஜாமீன்

மனு மீதான விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல்காந்திக்கு லக்னோ கோர்ட்டு சம்மன் அனுப்பியது.;

Update:2025-07-16 09:24 IST

லக்னோ,

எல்லை சாலைகள் அமைப்பில் ராணுவ கர்னலுக்கு நிகரான அந்தஸ்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா என்பவர் லக்னோ கோர்ட்டில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

அதில், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரத ஒற்றுமை யாத்திரையில் பேசிய ராகுல்காந்தி, சீன ராணுவத்திடம் நமது படையினர் அடி வாங்கியது பற்றி யாரும் ஒருதடவை கூட கேள்வி எழுப்பாதது ஏன் என்று பேசியதாகவும், ராணுவத்தை அவதூறாக பேசிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல்காந்திக்கு லக்னோ கோர்ட்டு சம்மன் அனுப்பியது.அதன்பேரில், ராகுல்காந்தி நேற்று பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜரானார். அவரை ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். ராகுல்காந்தி, ஜாமீன் பத்திரங்களை தாக்கல் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்