மணிப்பூரில் அதிரடி சோதனை; 203 ஆயுதங்கள் பறிமுதல்
போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து மணிப்பூரில் உள்ள நகரங்களில் அதிரடி சோதனைகளை நடத்தினர்.;
Image Courtesy : @manipur_police
இம்பால்,
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் மீது ஆயுதம் ஏந்திய கும்பலை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து மணிப்பூர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து மணிப்பூரில் உள்ள நகரங்களில் அதிரடி சோதனைகளை நடத்தினர்.
இந்த சோதனைகள் மூலம் சுமார் 203-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் நாட்டு வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள், கைத்துப்பாக்கிகள், நாட்டு துப்பாக்கிகள், ரைபிள்கள் உள்பட பல நவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. போராட்ட குழுவினர் இந்த ஆயுதங்களை போலீசாருக்கு எதிராக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்றும், இதன் மூலம் வன்முறை சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.