உ.பி.: இந்திய விமான படையின் பயிற்சி விமானம் குளத்தில் பாய்ந்தது
அவசரகால பாராசூட் உதவியுடன் விமானிகள் பிரவீன் அகர்வால் மற்றும் சுனில் பாண்டே உயிர் தப்பினர்.;
பிரயாக்ராஜ்,
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் பம்ராவ்லி விமான தளத்தில் இருந்து இந்திய விமான படையை சேர்ந்த பயிற்சி விமானம் ஒன்று வழக்கம்போல் இன்று பயிற்சிக்காக புறப்பட்டது.
அதில் தலைமை விமானி பிரவீன் அகர்வால் மற்றும் சுனில் பாண்டே ஆகிய 2 விமானிகள் பயணித்து உள்ளனர். இந்நிலையில் ராம்பாக் பகுதியருகே சென்று கொண்டிருந்த விமானம், மதியம் 12.30 மணியளவில், விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதன்பின்னர், அந்த விமானம் நீர் செடிகள் அடர்த்தியாக முளைத்திருந்த குளத்திற்குள் பாய்ந்தது. இதுதொடர்பாக தகவல் அறிந்ததும் ஹெலிகாப்டர் ஒன்று மீட்பு பணிக்கு சென்றது. அவசரகால பாராசூட் உதவியுடன் பிரவீன் அகர்வால் மற்றும் சுனில் பாண்டே உயிர்தப்பினர். விமானிகள் 2 பேரும் பாதுகாப்பாக உள்ளனர். எந்திர கோளாறால் விமான விபத்து நடந்துள்ளது என முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றது.