6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் அங்கீகாரம் ரத்து: தேர்தல் ஆணைய உத்தரவுக்கு கேரள ஐகோர்ட்டு தடை

கேரளாவில் எந்த தேர்தலிலும் தொடர்ந்து போட்டியிடாத 4 கட்சிகளின் அங்கீகாரத்தை கேரள மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது.;

Update:2025-11-22 05:50 IST

வூர்,

இந்திய தேர்தல் ஆணையத்தின் நடைமுறை சட்டப்படி, தொடர்ந்து 6 ஆண்டுகள் எந்த தேர்தலிலும் போட்டியிடாவிட்டால் சம்பந்தப்பட்ட கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்ற விதி உள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் கேரளாவில் எந்த தேர்தலிலும் தொடர்ந்து போட்டியிடாத 4 கட்சிகளின் அங்கீகாரத்தை கேரள மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்கு எதிராக ஜே.எஸ்.எஸ். கட்சி (ராஜன் பாபு பிரிவு), ஜே.எஸ்.எஸ். (பீனா குமாரி பிரிவு), கேரள காங்கிரஸ் (சகரியா தாமஸ் பிரிவு), எஸ்.ஆர்.பி. ஆகிய 4 கட்சிகள் தரப்பில் தேர்தல் ஆணையத்தின் ரத்து முடிவை தடை விதிக்க கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அருண் தலைமையிலான அமர்வு, மேற்கண்ட 4 கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததற்கு தடை விதித்து உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்