துடைப்பம் சின்னத்தில் வாக்களிக்கவிருக்கும் சோனியா காந்தி குடும்பம்.. தேர்தலில் ருசிகரம்

டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது.

Update: 2024-05-24 21:32 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அவருடைய மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் புதுடெல்லி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கிறார்கள். இந்த தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் சோம்நாத் பாரதி போட்டியிடுகிறார். எனவே இன்று நடைபெறும் தேர்தலில் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியின் துடைப்பம் சின்னத்துக்கு வாக்களிக்க உள்ளனர்.

இதேபோல் சாந்தினி சவுக் தொகுதியில் வசிக்கும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், அங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்காக கை சின்னத்தில் வாக்களிக்கிறார்.

இதுவரை பாரம்பரியமாக கை சின்னத்துக்கு வாக்களித்து வந்த சோனியா காந்தி குடும்பம், இந்த முறை ஆம் ஆத்மிக்கு வாக்களிக்கவுள்ளனர். அதுபோல் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் கை சின்னத்துக்கு வாக்களிக்கும் சூழல் உருவாகி இருப்பதும் டெல்லி அரசியலில் ருசிகரமாக பார்க்கப்படுகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்