ராஜஸ்தானில் இளைஞரின் வயிற்றில் இருந்து இரும்பு ஸ்பேனர்கள் அகற்றம்

இளைஞரின் வயிற்றில் இருந்த இரும்பு ஸ்பேனர்கள் மற்றும் டூத் பிரஷ்களை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.;

Update:2025-12-30 09:56 IST

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதாவது, இளைஞரின் வயிற்றுக்குள் இரும்பு ஸ்பேனர் மற்றும் டூத் பிரஷ் ஆகியவை இருப்பது ஸ்கேன் மூலம் தெரிய வந்தது.

இதையடுத்து அறுவைச்சிகிச்சை மூலம் இளைஞரின் வயிற்றில் இருந்த இரும்பு ஸ்பேனர்கள் மற்றும் டூத் பிரஷ்களை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். மொத்தம் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில் 2 இரும்பு ஸ்பேனர்கள் மற்றும் 7 டூத் பிரஷ்கள் அகற்றப்பட்டன. தற்போது அந்த இளைஞர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த இளைஞர் மனரீதியாக பாதிக்கப்பட்டவர் என்பதும் இதனால் இத்தகைய பொருட்களை அவர் விழுங்கி இருப்பதும் தெரியவந்தது.

 

Tags:    

மேலும் செய்திகள்