உள்துறை மந்திரி அமித்ஷா 2ம் தேதி அந்தமான் பயணம்
அந்தமான் யூனியன் பிரதேச கவர்னர் ஜோஷி விமான நிலையத்திற்கு நேரில் சென்று அமித்ஷாவை வரவேற்கிறார்.;
டெல்லி,
3 நாட்கள் அரசு முறை பயணமாக உள்துறை மந்திரி அமித்ஷா வரும் 2ம் தேதி அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு செல்கிறார். அவரை அந்தமான் யூனியன் பிரதேச கவர்னர் ஜோஷி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்கிறார்.
அதன்பின்னர் 3ம் தேதி நாடாளுமன்ற ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அமித்ஷா தலைமை தாங்குகிறார். இதையடுத்து குற்றவியல் சட்டவிதி தொகுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார். 3 நாட்கள் பயணத்தை நிறைவு செய்தபின் 4ம் தேதி அமித்ஷா டெல்லி திரும்புகிறார்.