ஆன்லைன் கேம் விளையாட பணம் கேட்ட சிறுவனை குத்திக்கொன்ற மாமா - அதிர்ச்சி சம்பவம்

ஆன்லைன் கேம் விளையாட மாமா நாகபிரசாத்திடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளான்.;

Update:2025-08-09 17:04 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் சோலதேவனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுவனின் மாமா நாகபிரசாத். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இதனிடையே, பள்ளிப்படிப்பை பாதியிலேயே முடிந்த அந்த சிறுவன், தனது மாமாவான நாகபிரசாத்துடன் தங்கி இருந்தார்.

சிறுவன் அடிக்கடி செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடி வந்துள்ளான். ஆன்லைன் கேம் விளையாட மாமா நாகபிரசாத்திடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளான்.

இந்நிலையில், கடந்த 5ம் தேதி அதிகாலை வீட்டில் சிறுவன் உறங்கிக்கொண்டிருந்தபோது, அவரது மாமா நாகபிரசாத் வீட்டில் இருந்த கத்திய கொண்டு சிறுவனை குத்திக்கொலை செய்துள்ளார். இதையடுத்து வீட்டில் இருந்து தலைமறைவானார்

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவான நாகபிரசாத்தை தேடி வந்தனர். ஆனால், நாகபிரசாத் நேற்று போலீசில் சரணடைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்