பீகார் தேர்தல்: முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத்தின் மூத்த மகன் படுதோல்வி

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன;

Update:2025-11-15 02:14 IST

பாட்னா,

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், தேசிய ஜனநாய கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்தியா கூட்டணி 35 தொகுதிகளில் வெற்றிபெற்றது. பிற கட்சிகள், சுயேட்சைகள் 6 தொகுதிகளை கைப்பற்றின.

இதனிடையே, ராஷ்டிரீய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனும், தேஜஸ்வியின் சகோதரருமான தேஜ் பிரதாப் யாதவ் கடந்த மே மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.பொறுப்பற்ற நடத்தை மற்றும் குடும்பத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியதற்காக 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தேஜ் பிரதாப், ஜனசக்தி ஜனதாதளம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மஹூவா தொகுதியில் போட்டியிட்டார்.

இந்நிலையி, தேர்தலில் 51938 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் படுதோல்வி அடைந்தார். அந்த தொகுதியில் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) வேட்பாளர் சஞ்சய் குமார் சிங் வெற்றி பெற்ற நிலையில், தேஜ்பிரதாப் யாதவ் 3-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்