டெல்லியில் தமிழ்நாடு காவல்துறை பஸ், கார் மோதி விபத்து - வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-12-05 15:06 IST

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள ஜானக்புரி பகுதியில் இன்று காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு காவல்துறைக்கு சொந்தமான பஸ் மீது பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் இரண்டு வாகனங்களுக்கும் தீப்பற்றி எரியத் தொடங்கின. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் பஸ் மற்றும் காரில் இருந்த அனைவரும் சரியான நேரத்தில் வெளியேறிவிட்டதால், அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிர்சேதம் எதுவும் நிகழாமல் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் வாகனங்கள் முழுவதும் எரிந்து தீக்கிரையாகின.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விபத்தில் சிக்கிய வாகனங்களில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். விபத்து ஏற்பட்ட பிறகு வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்